கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறாது என அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்ததால், கோவை மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
கோவை காளப்பட்டி பகுதியில் நேற்று திமுக சார்பில் ஒருங்கிணைந்த கோவை மாவட்டக் கழக செயற்குழு கூட்டம் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அமைச்சரிடம் கோவை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் இந்த ஆண்டு தவிர்த்து அடுத்த ஆண்டு முதல் தொடர்ந்து நடத்தலாம் என மாவட்ட ஆட்சியர் மூலம் பேசி முடிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த ஆண்டுதான் ஜல்லிக்கட்டு போட்டி கோவையில் நடைபெறுகிறது, என பதிலளித்துள்ளார்.
கோவை, திருப்பூர், பொள்ளாச்சி உட்பட்ட இப்பகுதியில் கோவை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி அனைவராலும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாகும். மேலும், இப்பகுதியில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஜல்லிக்கட்டு போட்டியும், கோவை மாவட்டத்தில் நடைபெறும் போட்டியே ஆகும் என்பதால், கோவை மாவட்ட மக்கள், மாடுபிடி வீரர்கள் ஆகியோர் பெரும் எதிர்பார்ப்புடன் இருப்பர்.
கோவை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த ஆண்டு கோவையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறாது என தற்போது தெரிவித்திருப்பது கோவை மக்களிடையேயும், மாடுபிடி வீரர்கள் இடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு கோவையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 400 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டதும், 900 காளைகள் அவிழ்த்து விடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.