அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வருகைக்காக போடப்பட்ட கொடிக்கம்பங்களை அகற்றும் போது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கொள்ள இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி நேற்று சிவகங்கைக்கு வருகை புரிந்தார். அங்கு காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் அறிவு சார் மைய கட்டிட பணியை ஆய்வு செய்தார். பின்னர், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டார்.
முன்னதாக, அமைச்சரை வரவேற்க உள்ளூர் திமுகவினர் சார்பில் சாலையில் இருபுறமும் தி.மு.க. கொடி கம்பங்கள் நடப்பட்டன.
நிகழ்ச்சிகள் முடிந்து அமைச்சர் உதயநிதி அங்கிருந்து புறப்பட்டதும், சாலைகளில் நடப்பட்டிருந்த கொடிக்கம்பங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
மருதுபாண்டியர் நகர் பகுதியில் உள்ள திமுக கொடி கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒப்பந்ததாரர் வீரமலை (54) என்பவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியானார். மின்சாரம் தாக்கி கொடி ஒப்பந்தகாரர் ஏழுமலை இறந்த சம்பவம் தொடர்பாக, காரைக்குடி வடக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலைகளில் பேனர்கள், கொடிக்கம்பங்கள் வைக்கப்படுவதால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க, சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்த போதிலும், இதுபோன்ற விதிமீறல்கள் உயிரிழப்புகள் தொடருவது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.