சென்னை : பாதுகாக்கப்பட்ட வன மண்டலங்களில் குவாரிகள் தொடர்பான தமிழக அரசின் அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சுயநல நோக்கத்துடன் செயல்படும் திறனற்ற திமுக அரசு தனது ஆட்சி காலம் முடிவதற்கு
முன்பு தமிழகத்தின் மொத்த வளத்தையும் சூறையாடி விட வேண்டும் என்று
முடிவெடுத்துள்ளதா என்ன?
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு வெளியே 10 கிலோ மீட்டருக்கு குவாரிகள் இயங்க மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் தடை விதித்துள்ளது. தமிழக அரசு 14.12.2022 அன்று வெளியிட்டிருக்கும் அரசாணை மீறுகிறது. இதை நாம் புரிந்து கொள்ள சற்று பின் நோக்கி செல்ல வேண்டும்.
ஜனவரி 2002 – தேசிய பூங்கா மற்றும் சரணாலயங்களை சுற்றி 10 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு பாதுகாக்கப்பட்ட வனமண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறைகளை வெளியிட்டது.
பிப்ரவரி 2011 – மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் பாதுகாக்கப்பட்ட வனமண்டலங்களை உருவாக்க புது விதிமுறைகளை வவளியிட்டது.
ஜுன் 2022 – மாண்புமிகு உச்சநீதிமன்றம் 2011ஆம் ஆண்டு வழங்கப்பட்ட விதிமுறைகளின்படி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் ஒரு கிலோமீட்டர் சுற்றளவு வரை பாதுகாக்கப்பட்ட வனமண்டல விதிமுறைகளை அனைத்து மாநில அரசும், கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்ற தீர்ப்பை வெளியிட்டது.
டிசம்பர் 14, 2022: இதற்கு முன்பு தமிழக சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை வெளியிட்ட அரசாணையில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளுக்கு வெளியே 1 கி.மீ. சுற்றளவு வரை குவாரிகள் இயக்க மறுக்கப்பட்ட அனுமதியை வாபஸ் வாங்கி, தற்போது மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது இந்த திறனற்ற திமுக அரசு.
ஆட்சிக்கு வந்த பின் குவாரிகளிடம் இருந்து வசூல் வேட்டையை துவங்க உருவாக்கப்பட்ட வழிமுறை தான் 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட அரசாணை. தடை விதித்த பின் அனைத்து குவாரி முதலாளிகளிடமும் வசூல் வேட்டை நடத்தியுள்ளது திறனற்ற திமுக. தற்போது வசூல் முடிந்தவுடன் தாங்கள் பிறப்பித்த தடையை நீக்கி குவாரிகள் இயங்க அனுமதி வழங்கியுள்ளது. விஞ்ஞான ஊழலின் பிறப்பிடமான திறனற்ற திமுக.
தற்போது பிறப்பிக்கப்பட்டு இருக்கும் அரசாணையை ரத்து செய்து பாதுகாக்கப்பட்ட
வனப்பகுதிகளுக்கு வெளியே ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு வரை குவாரிகள் இயங்க அனுமதி மறுக்கப்பட வேண்டும் என்பது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கோரிக்கையாகும், எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரஜீன் சன் மியூசிக்கில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர் பிரஜின். அதன் பின் இவர் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருந்தாலும்…
ஐஸ்வர்யா ரகுபதி தமிழில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ஐஸ்வர்யா ரகுபதி. இவர் தொகுப்பாளினி மட்டுமல்லாது நடிகையும்…
பாகிஸ்தானுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்துள்ளது. இதற்கு உலகமே இந்தியாவை பாராட்டி…
விஜய்க்கு ஒன்னும் தெரியாது தவெக தலைவராக பரிணமித்திருக்கும் விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ளார். தனது…
சிவகாசியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 71வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்த அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…
கிரிக்கெட்டின் தல கிரிக்கெட் ரசிகர்களால் தல என அழைக்கப்படுபவர் தோனி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக திகழ்ந்தவர்…
This website uses cookies.