“Right to Die with Dignity” : இறந்த குழந்தையை அட்டை டப்பாவில் கொடுத்த அரசு மருத்துவமனையின் செயலுக்கு பத்திரிகையாளர் ஆவுடையப்பன் கண்டனம்!
வடசென்னை கன்னிகாபுரம், 2ஆவது தெருவில் வசித்து வரும் மசூத்-சௌமியா தம்பதிக்கு கடந்த டிசம்பர் 5ஆம் தேதி குறைபிரசவம் ஆன நிலையில், வெள்ளம் காரணமாக போதய மருத்துவ உதவி கிடைக்காததால் குழந்தை இறந்தது. இந்த சம்பவம் நடந்து 5 நாட்களுக்கு பிறகு நேற்றைய தினம் (டிச.10) இறந்த குழந்தை அடக்கம் செய்யப்பட்டது.
அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னர் குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் அடைத்து பெற்றோரிடம் மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைத்துள்ளது இணைய தளத்தில் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்து பத்திரிகையாளரும், தொகுப்பாளருமான ஆவுடையப்பன் தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக தனது x தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “Right to Die with Dignity” -Article 21-அடிப்படை உரிமை. நான் பல முறை தமிழ்நாட்டில் சிறப்பாக இருக்கும் மருத்துவகட்டமைப்பை பாராட்டி எழுதி இருக்கிறேன் ஆனால், அதே அரசு மருத்துவமனை இறந்த குழந்தையை, Shroud என சொல்லப்படக்கூடிய துணியில் கூட சுத்தி கொடுக்காமல் இப்படி அட்டை டப்பாவில் கொடுப்பது அவலம்,அவமானம்.Very sorry state of affairs எனகுறிப்பிட்டு இந்த ட்வீட்டை அமைச்சர் மா.சுப்பிரமணியத்துக்கு டேக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது-
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.