மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வரும் நிலையில், தமிழக அரசுக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை ஒன்றை விடுத்தள்ளார்.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. தண்ணீர் கரை புரண்டு ஓடுவதால், கரையோர மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் நீர்வரத்தினால், தற்போது 115 அடியை மேட்டூர் அணை கடந்து விட்டது. இது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசுக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 46,000 கன அடி தண்ணீர் வருவதால் அணையின் நீர்மட்டம் இன்று காலை 115 அடியாக உயர்ந்திருக்கிறது. நீர்வரத்து இதே நிலையில் தொடர்ந்தால் அடுத்த இரு நாட்களில் மேட்டூர் அணை நிரம்புவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது!
காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு உழவர்கள் ஆயத்தமாகி விட்டதால், ஜூன் 12-ஆம் தேதி வரை காத்திருக்காமல் மேட்டூர் அணையை முன்கூட்டியே திறக்க வேண்டும். முன்கூட்டியே குறுவை சாகுபடியை தொடங்கினால், வடகிழக்கு மழையிலிருந்து பயிர்களை காக்க முடியும்!
மேட்டூர் அணை நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைக் கணக்கிட்டு அணை திறக்கும் தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டும். குறுவை சாகுபடிக்கு தேவையான விதை நெல், அடியுரம் உள்ளிட்ட இடுபொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும், என தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் ஜாம்பவனாக வலம் வருவபர் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகன் அர்ஜூன் ஒரு…
நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்று புகழப்படுகிறார். அவருக்கு ஓய்வே இல்லை என்பது…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த வாரம் மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான “ரெட்ரோ”…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை மக்கள் மத்தியில் கவர வைத்த பங்கு கோபிநாத், பிரியங்கா, மாகாபாவுக்கு உண்டு. நிகழ்ச்சியை கொண்டு…
இந்தியர்களை அதிரவைத்த சம்பவம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து இன்னும் பல…
This website uses cookies.