மேட்டூர் அணை நிரம்புவது மகிழ்ச்சிதான்… ஆனா, உங்க வேலைய நீங்க சரியா பண்ணுங்க… தமிழக அரசுக்கு அலர்ட் கொடுக்கும் அன்புமணி..!!

Author: Babu Lakshmanan
21 May 2022, 1:18 pm
Quick Share

மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வரும் நிலையில், தமிழக அரசுக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை ஒன்றை விடுத்தள்ளார்.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. தண்ணீர் கரை புரண்டு ஓடுவதால், கரையோர மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் நீர்வரத்தினால், தற்போது 115 அடியை மேட்டூர் அணை கடந்து விட்டது. இது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mettur Dam - updatenews360

இந்த நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசுக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 46,000 கன அடி தண்ணீர் வருவதால் அணையின் நீர்மட்டம் இன்று காலை 115 அடியாக உயர்ந்திருக்கிறது. நீர்வரத்து இதே நிலையில் தொடர்ந்தால் அடுத்த இரு நாட்களில் மேட்டூர் அணை நிரம்புவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது!

Anbumani 03 updatenews360

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு உழவர்கள் ஆயத்தமாகி விட்டதால், ஜூன் 12-ஆம் தேதி வரை காத்திருக்காமல் மேட்டூர் அணையை முன்கூட்டியே திறக்க வேண்டும். முன்கூட்டியே குறுவை சாகுபடியை தொடங்கினால், வடகிழக்கு மழையிலிருந்து பயிர்களை காக்க முடியும்!

மேட்டூர் அணை நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைக் கணக்கிட்டு அணை திறக்கும் தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டும். குறுவை சாகுபடிக்கு தேவையான விதை நெல், அடியுரம் உள்ளிட்ட இடுபொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Views: - 404

0

0