விஜயதாரணி செய்தது தேசத்துரோகம்.. எதிர்த்த பாஜகவின் பாசறைக்கே செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது : ஜோதிமணி காட்டம்!
விஜயதாரணி இன்று பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பாக 3 முறை போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வானவர். 2011,2016 மற்றும் 2021 என மூன்று முறை எம்எல்ஏவாக உள்ளவர்.
இந்த நிலையில், விஜயதரணி பாஜகவில் ஐக்கியமானதை தொடர்ந்து, அவரை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம் செய்து அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் அஜய் குமார் உத்தரவிட்டார்.
விஜயதாரணி மீது கட்சி தாவல் தடை சட்டம் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். விஜயதாரணி பாஜகவில் இணைந்தது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பலர் தங்களது விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, தலைவர் ராகுல்காந்தி நாட்டைக் காக்க இறுதி யுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ,விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் இருந்துவிலகி பாஜகவில் இணைந்திருப்பது ,இந்த தேசத்திற்கு செய்யும் மாபெரும் துரோகம்.
அரசியல் பெண்களுக்கு எப்போதும் போர்க்களம் தான். ஒவ்வொரு நாளும் நெருப்பாற்றை நீந்திதான் கடக்க வேண்டியிருக்கிறது.
பெண்களின் உழைப்பும், திறமையும், செல்வாக்கும் அவ்வளவு எளிதாக அங்கீகரிக்கப்படுவதில்லை என்பது உண்மைதான்.
ஆனால் அதற்காக கொண்ட கொள்கையில் சமரசம் செய்துகொள்வதையும், நாம் இவ்வளவு காலம் எதிர்த்து நின்ற பாஜகவின் பாசறைக்குச் செல்வதையும் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என கொந்தளித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.