கோவையில் வீடுகளை உரசி செல்வது போல் போடப்பட்டுள்ள மின்கம்பிகளால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை தடாகம் சாலை கோவில்மேடு பகுதியில் VOC நகர் உள்ளது. இங்கு 3வது வீதியில் பத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள மின் கம்பத்திலிருந்து அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு Three Space Line மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த மின் இணைப்பின் மின்கம்பிகள், இப்பகுதியில் உள்ள ஐந்தாறு வீடுகளுக்கு மேலே வீடுகளை உரசி செல்வது போல் போடப்பட்டுள்ளதால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதன் காரணமாக மாடிகளுக்கு யாரும் செல்வதில்லை எனவும், குழந்தைகளையும் மாடிக்கு செல்ல அனுமதிப்பதில்லை எனவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மாடிகளுக்குச் சென்றால் மின்கம்பிகள் உரசிவிட வாய்ப்புள்ளதால் பல வருடமாக செல்வதில்லை எனவும், இதனால் துணிகளை காயப்போடுவது, தண்ணீர் டேங்குகளை பராமரிக்க செல்வதற்கு கூட அச்சமாக உள்ளது எனவும், பல சமயங்களில் கனமழையின் போதோ, பலத்த காற்று வீசும் போதோ, மின் கம்பிகள் அறுந்து விழுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பலமுறை மின்வாரியத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளதாகவும், ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ள இப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.