‘மாடிக்கு போகவே பயமா இருக்கு’… வீடுகளை உரசிச் செல்லும் மின்கம்பிகள் ; குமுறும் குடியிருப்புவாசிகள்!!

Author: Babu Lakshmanan
2 June 2023, 6:32 pm
Quick Share

கோவையில் வீடுகளை உரசி செல்வது போல் போடப்பட்டுள்ள மின்கம்பிகளால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை தடாகம் சாலை கோவில்மேடு பகுதியில் VOC நகர் உள்ளது. இங்கு 3வது வீதியில் பத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள மின் கம்பத்திலிருந்து அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு Three Space Line மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த மின் இணைப்பின் மின்கம்பிகள், இப்பகுதியில் உள்ள ஐந்தாறு வீடுகளுக்கு மேலே வீடுகளை உரசி செல்வது போல் போடப்பட்டுள்ளதால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதன் காரணமாக மாடிகளுக்கு யாரும் செல்வதில்லை எனவும், குழந்தைகளையும் மாடிக்கு செல்ல அனுமதிப்பதில்லை எனவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மாடிகளுக்குச் சென்றால் மின்கம்பிகள் உரசிவிட வாய்ப்புள்ளதால் பல வருடமாக செல்வதில்லை எனவும், இதனால் துணிகளை காயப்போடுவது, தண்ணீர் டேங்குகளை பராமரிக்க செல்வதற்கு கூட அச்சமாக உள்ளது எனவும், பல சமயங்களில் கனமழையின் போதோ, பலத்த காற்று வீசும் போதோ, மின் கம்பிகள் அறுந்து விழுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பலமுறை மின்வாரியத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளதாகவும், ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ள இப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

Views: - 357

0

0