இஸ்ரேலின் பல்வேறு நகரங்களை பாலஸ்தீனிய ஆயுதக் குழுக்கள் திடீரென ஆயுதத் தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை பயங்கரவாத இயக்கமாக கருதப்படும் ஹமாஸ் அமைப்பும், மேற்குகரை பகுதியை முகமது அப்பாஸ் தலைமையிலான அரசும் நிர்வகித்து வருகின்றன.
மேற்கு கரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் அடிக்கடி மோதல் ஏற்படும்.
இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பும், பாலஸ்தீனத்தின் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக் குழுக்களும் இஸ்ரேல் மீது ஆயுத தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. காசா முனையில் இருந்து 20 நிமிடங்களில் சுமார் 5 ஆயிரம் ராக்கெட்டுக்கள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டுள்ளன. இதனால், அப்பகுதி உருக்குலைந்து போயுள்ளது.
மேலும், பாலஸ்தீன ஆயுதக் குழுவினர் இஸ்ரேலுக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடும் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, அல் அக்சா பிளோட் என்ற பெயரில் இஸ்ரோல் மீது போர் தொடங்கியுள்ளதாக பாலஸ்தீனிய ஆயுதக்குழு ஹமாஸ் அறிவித்துள்ளது.
https://twitter.com/i/status/1710546136778379313மேலும், இஸ்ரேலிய எல்லை நகரங்களில் உள்ள காவல்நிலையங்களை பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் கைப்பற்றியுள்ளதாகவும், இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரை பிணை கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.