"விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனாவின் ரணபலி " - திரைப்படத்தின் மிரட்டலான டீசர் வெளியீடு!

14 hours ago

தென்னிந்திய திரையுலகின் மோஸ்ட் வான்டெட் ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில், இயக்குநர் ராகுல் சங்கிருத்தியன் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான வரலாற்றுத் திரைப்படமான 'ரணபலி படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் வகையில் வெளியாகியுள்ள இந்த டீசர் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

பின்னணியும் கதைக் களமும்;

19ஆம் நூற்றாண்டில் (1854–1878 காலக்கட்டத்தில்) பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பிரிட்டிஷாரின் கொடூர அடக்குமுறைக்கு எதிராகப் போராடிய ஒரு துணிச்சலான கிராமத்து வீரனின் கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ராயலசீமா பகுதியின் வறட்சி மற்றும் வரலாற்று உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு இப்படம் ஒரு பியரியட் ஆக்ஷன் டிராவாவாக தயாராகியுள்ளது.

முக்கிய கதாபாத்திரங்கள்

விஜய் தேவரகொண்டா:

படத்தில் 'ரணபலி' என்ற ஆக்ரோஷமான மற்றும் வலிமையான போலாளி கதாபாத்திரத்தில் மிரட்டலான தோற்றத்தில் நடித்துள்ளார்.

ராஷ்மிகா மந்தனா:

 இவருக்கு ஜோடியாக 'ஜெயாம்மா' என்ற உணர்வுபூர்வமான முக்கியக் கதாபாத்திரத்தில் வலம் வருகிறார்.

ஆர்னால்ட் வோஸ்லோ:

 உலகப்புகழ்பெற்ற 'தி மம்மீ'  திரைப்பட நடிகர், இப்படத்தில் முதன்மை வில்லியாக 'சார் தியோடர் ஹெக்டர்'  என்னும் பிரிட்டிஷ் அதிகாரியாக நடித்துள்ளார்.

தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பக் குழு:

இயக்கம்: ராகுல் சங்கிருத்தியன்

தயாரிப்பு: மைத்ரி மூவி மேக்கர்ஸ் (நவீன் யெர்னேனி, ஒய். ரவிசங்கர்) மற்றும் டி-சீரிஸ் இணைந்து வழங்குகின்றன.

இசை: அஜய் - அதுல்

ஒளிப்பதிவு: நீரவ் ஷா

வெளியீட்டுத் தேதி

பான்-இந்திய மொழிகளில் வெளியாகவுள்ள இப்படம், வரும் அக்டோபர் 16, 2026 அன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. டீசரில் இடம்பெற்றுள்ள காட்சியமைப்புகளும், பின்னணி இசையும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்