விடுதி உணவின் தரத்தை நேரில் ஆய்வு செய்யப் பெற்றோர்களுக்கு SNS கல்வி நிறுவனம் அழைப்பு

1 min ago | Tamil Nadu | Coimbatore

கல்வியின் தலைநகரமாக விளங்கும் கோவையில், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்கால நம்பிக்கையைத் தனியார் கல்வி நிறுவனங்களிடம் ஒப்படைக்கின்றன. குறிப்பாக, வெளியூர்களிலிருந்து வந்து விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பு என்பது சாதாரண நிர்வாகப் பிரச்சினை அல்ல; அது பெற்றோர்களின் நம்பிக்கையுடன் தொடர்புடையது.

இந்தச் சூழலில், கோவை சரவணம்பட்டியில் அமைந்துள்ள SNS கல்வி நிறுவனத்தில்  அக்டோபர் 28 அன்று,   கல்லூரி விடுதியில் வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்ததாகச் செய்தி வெளியானது. மாணவர்கள் பதிவு செய்ததாகக் கூறப்படும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவியது.

இது சம்பந்தமாக நிர்வாகத்தை தொடர்ப்பு கொண்டு பேசியபோது

" மாணவர்களின் பெற்றோர்கள் அடுத்த வாரம் புதன்கிழமை முதல் மூன்று நாட்கள் விடுதியில் தங்கியிருந்து உணவின் தரத்தை நேரடியாகச் சரிபார்க்க SNS கல்வி நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்தார்கள்."

பெற்றோர்கள் விடுதியில் தங்கியிருந்து, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் தயாரிப்பு முறைகளை நேரில் பார்வையிட்டு உறுதிப்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் விடுதியில் தங்கியிருந்து, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் தயாரிப்பு முறைகளை நேரில் பார்வையிட்டு உறுதிப்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்