“தமிழக சட்டமன்றம் ரியல் பிக்பாஸ் போல் உள்ளது” - என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்!

01 Sep 26

 மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்ற பூலித்தேவன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தற்போதைய தமிழக அரசு மற்றும் சட்டமன்ற செயல்பாடுகள் குறித்து பல்வேறு கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

சட்டமன்றம் பிக்பாஸ் போன்றது:

 "முதலமைச்சரை பார்க்க LED திரைகள் வேண்டும் என்கிறார்கள், அதையும் ரசிக்கிறார்கள். சட்டமன்றம் 'ரியல் பிக்பாஸ்' போலவே உள்ளது; அருமையான எண்டர்டெயின்மெண்டாக இருக்கிறது. தற்போதைய சட்டமன்றம் ஒரு தியேட்டர் போல உள்ளது; அங்கு எல்லாமே நன்றாக இருக்கிறது என்று மட்டுமே சொல்கிறார்கள்" என்று விமர்சித்தார்.

 தமிழர்கள் ஆளுவது குறித்து:

 "தமிழர்கள் ஆள்கிறார்கள் என நாம் பெருமிதம் கொள்ள முடியாது. தமிழன் ஆள்வதல்ல நமது கனவு, தமிழன் தமிழனாக ஆள வேண்டும், தமிழுக்கும் தமிழருக்குமாக ஆள வேண்டும்" என்றார்.

துரோகங்கள் பற்றி:

"தமிழனாக பிறந்தவன் எல்லாம் தமிழன் அல்ல; இங்கு காட்டிக்கொடுத்தவர்கள், துரோகம் செய்தவர்கள் எல்லாம் நம் இரத்த சொந்தமாகவே இருக்கிறார்கள். தமிழனுக்கு வீரமும், மானமும் உடன்பிறந்தது போல துரோகமும் உடன்பிறந்திருக்கிறது" என்று குறிப்பிட்டார்.

பிரச்சனைகளை அணுகும் முறை:

"மீனவர்களைச் சுட்டால், காவிரி நீர் மீட்கப்படாமல் இருந்தால், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு நடந்தால் அதையெல்லாம் ஒரு பெரிய பிரச்சனையாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் 'சர்க்கார்' பட நோட்டீஸை கிழித்தது தான் சர்வதேச பிரச்சனை என்கிறார்கள்" என்று அரசின் முன்னுரிமைகளை சாடினார்.

மேட்டூர் அணை குறித்த விமர்சனம்:

 "மேட்டூர் அணையை கட்டிய அந்த காலகட்டத்தில் 10 கோடி ரூபாய் தான் செலவாகிருக்கும், ஆனால் இன்று அந்த அணையைத் திறக்கச் செல்லவே 6 கோடி ரூபாய் செலவாகிறது" என்று தெரிவித்தார்

முக்கிய செய்திகள்