படம் ஓடலைன்னா நான் எப்படி பொறுப்பாக முடியும்?… டென்ஷனான அஜித்… கோபத்தில் கொடுத்த பதில்..!

மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் சமீபத்தில் அஜித் குமார் கமிட்டாகி இருந்தார் . விடாமுயற்சி படத்தைத் தாண்டி குட் பேட் அக்லி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் யார் யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்களிடையே தொற்றியுள்ளது. இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தைக் குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.


படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் அஜித் மூன்று முக பாவனையை கொடுத்தபடியுள்ளார். ஒன்று சாந்தமாகவும், ஒன்று சிரித்துக்கொண்டும் மற்றொன்று கோவமாக முக பாவனையில் காணப்படுகிறார்.

மேஜையில் துப்பாக்கிகள் இடம் பெற்றுள்ளன. இந்த போஸ்டர் தற்பொழுது ரசிகர்களுக்கு விருந்து அலளிக்கும் வகையில் இருக்கிறது. தற்பொழுது சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது.

படத்தை புஷா திரைப்படத்தை தயாரித்த மைத்த்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார். அதன்படி ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜூன் 6 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குட் பேட் அக்லி படம் 2025 ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: பல முறை சிவகார்த்திகேயனிடம் வாய்ப்பு கேட்டேன்… ஆனால், மேடையில் வருத்தப்பட்ட வடிவுக்கரசி..!

சமீபத்தில், குட் பேட் அக்லி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை பட குழு வெளியிட்டு இருந்தனர். இந்த போஸ்டர் 24 மணி நேரத்தில் 41 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டு மாபெரும் சாதனையும் படைத்தது. இந்த படத்தில், நடிக்க நடிகர் அஜித்துக்கு 165 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், சமீபத்தில் சண்டைக் காட்சிகளுடன் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில் படத்தின் OTT உரிமை குறித்து சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தை பிரபல OTT நிறுவனமான Netflix 95 கோடி கொடுத்து வாங்கியுள்ளார்களாம். இதன் மூலம் படத்தின் பட்ஜெட்டில் கால்பங்கு படப்பிடிப்பின் போதே குட் பேட் அக்லீ திரைப்படம் வசூல் செய்துவிட்டது என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

மேலும் படிக்க: அந்த விசயத்தில் நமீதாவை ஏமாற்றிய அஜித்.. 16 ஆண்டுகளுக்குப் பின் வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!

இந்நிலையில், பில்லா, ஏகன், ஆரம்பம், விசுவாசம் ஆகிய படங்களில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்த நயன்தாரா. தற்போது, குட் பேட் அக்லி படத்தின் மூலமாக ஐந்தாவது முறையாக அஜித்துடன் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார். மேலும், இந்த படத்திற்கு நயன்தாராவிற்கு 10 கோடி சம்பளம் வழங்கப்படுகிறதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: மாப்பிள்ளை கட்டுடா தாலிய.. “டாடா” ஹீரோயினுக்கு மஞ்சும்மல் பாய்ஸ் பட நடிகருடன் கல்யாணம்..! (Video)

நடிகர் அஜித்தின் பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில், சமீப காலமாக நீங்கள் நடிக்கும் படங்களில் உங்கள் நடிப்பு நன்றாகவே இருந்தாலும், சரியாக ஓடுவதில்லை. நீங்கள் சரியாக கதையை தேர்வு செய்யாதது தான் இதன் காரணம என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கோபத்தில் அஜித் நான் ஒரு நடிகன் நடிப்பது மட்டும் தான் என் வேலை. படம் ஓடினால், இயக்குனர் காரணம் தோற்றால் நான் எப்படி காரணம் ஆக முடியும். ஒரு படம் எப்படி ஓடுகிறது என தெரிந்தால் நான் இயக்குனர் ஆகியிருப்பேன். நடிகராக இருந்திருக்க மாட்டேன். படம் ஓடவில்லை எனில் அது இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரின் தவறு தானே தவிர அது என்னுடைய தவறு அல்ல என்று பேசி இருந்தார்.

Poorni

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

5 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

6 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

6 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

6 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

7 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

8 hours ago

This website uses cookies.