மாப்பிள்ளை கட்டுடா தாலிய.. “டாடா” ஹீரோயினுக்கு மஞ்சும்மல் பாய்ஸ் பட நடிகருடன் கல்யாணம்..! (Video)

Author: Vignesh
24 April 2024, 11:06 am

அழகிய இளம் நடிகையாக தமிழ் திரைத்துறையின் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் படத்தில் நடித்தன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகை அபர்ணா தாஸ். கேரளாவில், டிக்டாக் மூலம் வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமடைந்த அபர்ணா தாஸ் மலையாள சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

அதன் பின்னர் தான் தமிழில் பீஸ்ட் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து நடித்தார். அதன் பின்னர் கவினுக்கு ஜோடியாக டாடா படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகிவிட்டார். அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படைத்தது.

மேலும் படிக்க: ப்ரியா பவானி ஷங்கரை அசிங்கப்படுத்திய விஷால்.. கண்டுக்காமல் அலட்சியம் செய்த ஹரி..!(Video)

தொடர்ந்து தமிழ் ,மலையாளம் என கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வரும் அவர் தற்போது, தனது கனவு வீட்டை கட்டி குடிபெயர்ந்துள்ளார். இளைஞர்கள் மனதில் தனக்கென்று தனி ஒரு இடத்தை பிடித்துள்ள நடிகை அபர்ணாதாஸ் 28 வயதில் திருமணம் செய்து கொண்டுள்ளார். அதாவது, மலையாள நடிகர் தீபக் என்பவர் உடன் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

மேலும் படிக்க: ஷூட்டிங் செய்ய வந்த ‘திரிஷா’வை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள்.. திணறிப் போன ஈரோடு..!(Video)

முன்னதாக, திருமணம் செய்து கொண்டுள்ள நடிகர் தீபக் சமீபத்தில், வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அபர்ணாதாஸ் மற்றும் தீபத்தின் திருமணம் கேரளாவில் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!