அந்த விசயத்தில் நமீதாவை ஏமாற்றிய அஜித்.. 16 ஆண்டுகளுக்குப் பின் வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!

Author: Vignesh
9 May 2024, 10:56 am
namitha
Quick Share

தல அஜித்தின் சினிமா கெரியரில் மிக முக்கிய மைல் கல்லாக அமைந்த திரைப்படம் “பில்லா” 2007 ஆம் ஆண்டு வெளியான பில்லா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு அதன் இரண்டாம் பாகம் வெளியானது. இப்படத்தில் அஜித்தின் ரோல், அவரது நடிப்பு, ஸ்டண்ட் காட்சி உள்ளிட்டவை ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

மேலும் படிக்க: சர்ஜரி பண்ணா உங்களுக்கு என்ன?.. பாடி ஷேமிங் செய்த நெட்டிசனை விளாசிய திவ்ய பாரதி..!

விஷ்ணுவர்தனின் இயக்கத்தில் உருவான பில்லா திரைப்படம் ரஜினியின் பில்லா பட ரீமேக் என்றாலும் அஜித்தின் ஸ்டைலே வேற லெவலில் இருந்தது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜாவின் பிஜிஎம் மிகப்பெரிய வெற்றிக்கு வழிவகுத்தது. நமீதா, நயன்தாரா , பிரபு, ரஹ்மான்,ஆதித்யா மேனன், சந்தானம், பிரேம்ஜி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம் இன்றளவும் ரசிகர்களின் பேவரைட் திரைப்படமாக தான் இருந்து வருகிறது.

சமீபத்தில் பில்லா படத்தில் நடித்த நடிகை நமீதா படத்தில் நடந்த சில சம்பவங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அஜித்தும் நானும் ஒரே மாதிரியான டைப் என்றும் அவ்வளவு சீக்கிரம் எளிதாக யாரிடமும் பேச மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். மேலும், ஒவ்வொரு படத்தின் ஷூட்டிங்கின் போதும் அனைவருக்கும் பிரியாணி செய்து கொடுப்பது அஜித்தின் பழக்கமாக இருப்பது தெரியுமா என்ற கேள்விக்கு அப்படியா என்று நமிதா ஆச்சரியப்பட்டுள்ளார்.

namitha

மேலும் படிக்க: ஒரு செகண்ட்ல சமந்தான்னு நினைச்சிட்டோம் – நியூ லுக்கில் Video வெளியிட்ட வரலட்சுமி சரத்குமார்..!

மேலும், பில்லா படத்தில் நமீதா நடிக்கும் வரை அந்த மாதிரியான ஒரு சம்பவம் நடக்கவே இல்லையாம். ஒரு வேலை நான் செட்டில் இல்லாத போது அஜித் செய்து கொடுத்திருக்கலாம் எனவும், அது சம்பந்தமான புகைப்படங்களை நான் சோசியல் மீடியாவில் பார்ப்பதாகவும், பில்லா படத்திற்கு முன்பும் படத்திற்கு பின்பும் அஜித்தை நான் பார்க்கவே இல்லை என்றும் அஜித் இந்த விஷயத்தில் என்னை ஏமாற்றி விட்டார் என்று நமிதா தெரிவித்துள்ளார்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 304

    0

    0