அரசு ஊழியர்களுக்கு இன்று கடைசி நாள்! சொத்து விவரங்களைச் சமர்ப்பிக்காவிட்டால் பதவி உயர்வில் சிக்கல்!

1 min ago

அக்டோபர் 31-க்குள் தாக்கல் செய்ய உத்தரவு – தாமதமாகச் சமர்ப்பித்த தேதி ACR-ல் பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை!
சென்னை:

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் தங்களது 2025-ஆம் ஆண்டுக்கான அசையும் மற்றும் அசையாச் சொத்து விவரங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்று (அக்டோபர் 31) நிறைவடைகிறது. இதுவரை சொத்து விவரங்களைச் சமர்ப்பிக்காத அரசு ஊழியர்கள் உடனடியாகத் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் தங்களது பெயரிலும், குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் உள்ள சொத்துகள் தொடர்பான விவரங்களை உரிய முறையில் சமர்ப்பிக்க வேண்டும். இதில் வீடு, நிலம் உள்ளிட்ட அசையாச் சொத்துகள், வாகனங்கள் மற்றும் பிற அசையும் சொத்துகள், தங்கம் மற்றும் நகைகள், வங்கிக் கணக்குகளில் உள்ள வைப்புத்தொகைகள், கடன்கள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற வேண்டும்.

IFHRMS மற்றும் களஞ்சியம் செயலி மூலம் சமர்ப்பிக்கலாம்!

அரசு ஊழியர்கள் தங்களது சொத்து விவரங்களை IFHRMS இணையதளம் அல்லது களஞ்சியம் செயலி வாயிலாகச் சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கடைசி நாளாக 31.10.2026 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதவி உயர்விலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு!

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சொத்து விவரங்களைச் சமர்ப்பிக்கத் தவறினால், அது அரசு ஊழியர் நடத்தை விதிகளை மீறிய செயலாகக் கருதப்படலாம். மேலும், பதவி உயர்வுக்கான தகுதிப் பட்டியல் தயாரிக்கும்போது சொத்து விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா என்பதும் கவனத்தில் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலக்கெடுவுக்குப் பிறகு சொத்து விவரங்களைச் சமர்ப்பிக்கும் ஊழியர்களின் சமர்ப்பிப்பு தேதி, அவர்களது ஆண்டு ரகசிய அறிக்கையான ACR-ல் குறிப்பிடப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

காலக்கெடுவுக்குப் பிறகு சொத்து விவரங்களைச் சமர்ப்பிக்கும் ஊழியர்களின் சமர்ப்பிப்பு தேதி, அவர்களது ஆண்டு ரகசிய அறிக்கையான ACR-ல் குறிப்பிடப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்