
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்க்கு, திமுக சட்டமன்ற உறுப்பினர் பி.கே. சேகர்பாபு எழுந்து நின்று மரியாதை நிமித்தமாகப் பதில் வணக்கம் செலுத்திய நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பரபரப்பான கூட்டத்தொடர்:
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தற்போது மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையே பல்வேறு மக்கள் நலப் பிரச்சினைகள் மற்றும் கொள்கை விவகாரங்கள் குறித்து காரசாரமான விவாதங்கள் அரங்கேறி வருகின்றன.
பதில் வணக்கம் செலுத்திய சேகர்பாபு:
அவை நடவடிக்கைகளின் போது முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சி வரிசையைப் பார்த்து புன்னகையுடன் வணக்கம் தெரிவித்தார். அப்போது அங்கு அமர்ந்திருந்த முன்னாள் அமைச்சரும், தற்போதைய திமுக எம்.எல்.ஏ-வுமான பி.கே. சேகர்பாபு, சற்றும் தயங்காமல் உடனடியாகத் தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்று முதலமைச்சருக்குப் பதில் வணக்கம் செலுத்தினார்.
அரசியல் நாகரிகம்:
சமீபத்தில் இந்து சமய அறநிலையத்துறை நிதியைப் பயன்படுத்துவது தொடர்பாக, அரசு எடுத்த முடிவுகளுக்கு எதிராக அவையில் பி.கே. சேகர்பாபு கடுமையான வாதங்களை முன்வைத்திருந்தார்.
கொள்கை ரீதியாகவும், திட்டங்கள் குறித்தும் இரு தரப்புக்கும் இடையே கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், அதையெல்லாம் தாண்டி ஒருவருக்கொருவர் தனிப்பட்ட முறையில் அளித்துக் கொள்ளும் மரியாதையையும், ஆரோக்கியமான அரசியல் நாகரிகத்தையும் இந்த நிகழ்வு வெளிப்படுத்தியிருப்பதாகப் பலரும் பாராட்டி வருகின்றனர்.