
அமராவதி: அர்னாப் மற்றும் முரசு புயல்களால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக ஆந்திரப் பிரதேச முதல்வரின் நிவாரண நிதிக்கு விஐடி பல்கலைக்கழகம் ஒரு கோடி வழங்கியுள்ளது.
அமராவதியில் ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடுவிடம், விஐடி வேந்தர் கோ. விசுவநாதன் வங்கி வரைவோலையை நேரில் வழங்கினார்.
இதுகுறித்து விஐடி வேந்தர் கோ.விசுவநாதன்கூறுகையில், “இயற்கை பேரிடர் காலங்களில் மக்களோடு மக்களாக நின்று உதவுவது விஐடி பல்கலைக்கழகத்திதின் தார்மீகக் கடமையாகும். நாடு முழுவதும் சமூக நலன், இயற்கை பேரிடர் நிவாரணம் மற்றும் சமூக மேம்பாட்டுப் பணிகளுக்கு விஐடி பல்கலைக்கழகம் தொடர்ந்து பங்களித்து வருகிறது" என்றார்.
இச்சந்திப்பின் போது விஐடி பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன் மற்றும் விஐடி அமராவதி பதிவாளர் ஜகதீஷ் சந்திர முடிகந்தி ஆகியோர் உடனிருந்தனர்.