
கோவை, நாயக்கன்பாளையம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கனிமொழி சந்தோஷ் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுடன் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடினார்.
விழாவில் பேசிய அவர்,
“குழந்தைகள் தின நிகழ்ச்சி என்றாலே நான் ஓடோடி வந்து கலந்து கொள்வேன். அனைவருக்கும் எனது இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்.
நமது முதலமைச்சர் அவர்கள் குழந்தைகளின் நலனுக்குத்தான் முன்னுரிமை அளித்து வருகிறார். குழந்தைகளாகிய நீங்கள்தான் தமிழகத்தின் எதிர்காலம். நீங்கள் நன்றாக இருந்தால்தான் தமிழகம் நன்றாக இருக்கும்."
இன்றைய குழந்தைகள் சட்டமன்ற நிகழ்வுகளையும் புரிந்துகொள்ளும் அளவிற்கு மிகுந்த முதிர்ச்சியுடனும் அறிவாற்றலுடனும் இருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் ஒரு நல்ல மாணவராகப் படித்து, வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதுதான் முதலமைச்சர் அவர்களின் விருப்பமும் ஆசையும்.
அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அனைத்து வசதிகளுடனும், தரமான கல்வியுடனும் சிறந்து விளங்க வேண்டும் என்பதும் முதலமைச்சர் அவர்களின் கனவாக உள்ளது. அந்தக் கனவை நனவாக்கும் வகையில் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகள் அனைவருக்கும் கேக் வழங்கி, அவர்களுடன் மகிழ்ச்சியாகக் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடினார்.