“மாத்திரை உறைகளில் இந்தி திமுகவின் போலி நாடகம் வெளுத்தது இருமொழிக் கொள்கையில் தவெக அரசு ஒருபோதும் சமரசம் செய்யாது - அமைச்சர் அருண்ராஜ்!

1 min ago

சென்னை:

கரூர் மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரை உறைகளில் (கவர்கள்) இந்தி இடம்பெற்ற விவகாரம் தொடர்பாக, திமுகவினர் திட்டமிட்டுப் பரப்பும் குற்றச்சாட்டுகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார். முந்தைய திமுக ஆட்சியில் அச்சிடப்பட்ட மாத்திரை உறைகளை வைத்துக்கொண்டு, தற்போது தவெக அரசு மீது பழிபோட்டு திமுகவினர் மலிவான அரசியல் செய்வதாக அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மாத்திரை உறை விவகாரம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையின் விவரம்:

திமுகவின் மலிவான அரசியலும், போலி நாடகமும்:

எதற்கெடுத்தாலும் மொழியை வைத்து மலிவான அரசியல் பிழைப்பு நடத்தும் திமுகவினர், தற்போது கரூர் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாத்திரை உறைகளைக் கையில் எடுத்துள்ளனர். உண்மையை அடியோடு மறைத்து, மக்கள் மத்தியில் திட்டமிட்டுப் பொய்க் குழப்பத்தை ஏற்படுத்தத் துடிக்கும் திமுகவினருக்கும், தமிழக மக்களுக்கும் இந்த விவகாரத்தின் அப்பட்டமான உண்மை நிலையைத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகிறது. தங்கள் ஆட்சியில் நடந்த தவறுகளை மறைத்துவிட்டு, தற்போதைய ஆளுங்கட்சியின் மீது அபாண்டமாகப் பழிபோடுவது திமுகவின் அரசியல் தந்திரமாகும். இதன் மூலம் திமுகவின் போலி நாடகத்தின் சாயம் வெளுத்துள்ளது.

திமுக ஆட்சியிலேயே கொண்டுவரப்பட்ட மாத்திரை உறைகள்:

கோவை மற்றும் கரூர் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வடமாநிலத் தொழிலாளர்கள் அதிக அளவில் வருவதால், அவர்களுக்குப் புரியும் வகையில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தியிலும் குறிப்புகள் அச்சிடப்பட்ட மாத்திரை உறைகள் சிந்தாமணி கூட்டுறவு நிறுவனம் மூலம் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், இந்த நடைமுறை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது முந்தைய திமுக ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது.

தற்போதைய நிர்வாகம், மருத்துவமனைகளில் உள்ள தேவையின் அடிப்படையில் மட்டுமே மாத்திரை உறைகளைக் கொள்முதல் செய்துள்ளதே தவிர, திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அந்த மாத்திரை உறைகளின் வடிவமைப்பிலோ அல்லது அதிலுள்ள மொழியிலோ எவ்வித மாற்றமும் செய்யவில்லை. தங்கள் ஆட்சியிலேயே இவை புழக்கத்திற்கு வந்தபோது வாய்மூடி, கைகட்டி மௌனியாக இருந்த திமுகவினர், இப்போது திடீரென மொழிப்போர் காவலர்கள் போல் வேடம் போடுவது ஏன்?

தமிழ், ஆங்கிலத்தில் புதிய மாத்திரை உறைகள்:

இந்த விவகாரம் அரசின் கவனத்திற்கு வந்ததையடுத்து, சர்ச்சைக்குரிய அந்தப் பழைய மாத்திரை உறைகளில் நோயாளிகளுக்கு மாத்திரைகள் வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு மருத்துவமனை நிர்வாகங்களுக்கும், மருந்தாளுநர்களுக்கும் நேற்று இரவே உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே அச்சிடப்பட்ட புதிய மாத்திரை உறைகளைத் தயாரிக்கப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அவை முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.ள்ளார்.

இருமொழிக் கொள்கையில் ஒருபோதும் சமரசம் இல்லை:

தமிழ்நாட்டில் தொடர்ந்து இருமொழிக் கொள்கையே கடைப்பிடிக்கப்படும் என்பதில் தற்போதைய அரசு மிகவும் உறுதியாக உள்ளது. எந்தவொரு சூழ்நிலையிலும், இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசு ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது.

இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்து

முக்கிய செய்திகள்