குறைந்தது சென்னை.. எகிறியது கோவை.. அதிகரித்த பலி எண்ணிக்கை : இன்றைய தமிழக கொரோனா நிலவரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 January 2022, 8:40 pm

சென்னை : தமிழகத்தில் மேலும் 30,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 30,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31 லட்சத்து 33 ஆயிரத்து 990 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 954 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 40 பேர் உயிரிழந்துள்ளார். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 218 ஆக அதிகரித்துள்ளது. இன்று 24,283 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 95 ஆயிரத்து 818 ஆக அதிகரித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 6,383 பேருக்கும், இதற்கு அடுத்தபடியாக கோவையில் 3,912 பேருக்கும், மூன்றாவது இடத்தில் செங்கல்பட்டில் 1,841 பேருக்கும், கன்னியாகுமரியில் 1,248 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பூரில் 1507 பேருக்கு பாதிப்பு பதிவாகியுள்ளது.

  • We are lesbians.. Shocking video of Vijay TV serial actresses taking turns tying thali நாங்க லெஸ்பியன்.. விஜய் டிவி சீரியல் நடிகைகள் மாறி மாறி தாலி கட்டிய ஷாக் வீடியோ!