கோவையில் வீட்டின் கதவை உடைத்து 29 சவரன் நகை திருட்டு: மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு..!!

Author: Rajesh
25 January 2022, 9:18 am

கோவை: கோவை ஒண்டிப்புதூரில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்த மர்ம நபர்கள் 29 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் செந்தில் ஜனதா நகரை சேர்ந்தவர் சையது இப்ராஹிம். இவரது மனைவியின் தந்தைக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவரை பார்க்க கடந்த 10 நாட்களுக்கு முன் ஊருக்கு சென்றுள்ளார்.

இதனிடையே நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பக்கவாட்டு பகுதியில் இருந்த கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சையது, உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 29 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.

தொடர்ந்து சிங்காநல்லூர் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிந்த போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

  • coolie movie audio launch function on august first week இந்த முறை ரஜினி சொல்லப்போகும் கதை? ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு தயாராகும் கூலி படக்குழு!