8 மாதங்களில் திமுக செய்த சாதனைகளை கூறி வாக்கு சேகரியுங்கள் : கட்சியினருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தல்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 February 2022, 8:49 pm

8 மாதங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு சேகரியுங்கள் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

தமிழகத்தில் வரும் பிப்ரவரி 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கலும் நிறைவு பெற்றது.

இதையடுத்து வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே கோவையில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

கோவை ஈச்சனாரியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, மாநில வளர்ச்சியிலும், மக்கள் நலனிலும் அக்கறை கொண்டு ஒய்வறியாது உழைத்து வரும் முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 8 மாதங்களில் செய்த சாதனைகளைள எடுத்துக்கூறி மக்களிடம் வாக்கு சேகரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

  • h vinoth will have high chances to direct rajinikanth movie விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?