‘கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிப்போம்’: கோவையில் அரசு அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு..!!

Author: Rajesh
9 February 2022, 1:39 pm

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலேக்ஸ் தலைமையில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு முறை உறுதிமொழி ஏற்கப்பட்டது

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் தலைமையில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு முறை உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதில் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும், கடன் பிணை தொகையை வழங்கி, கட்டாய பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது.

கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்தைக் கருத்தில் கொண்டு சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், கொத்தடிமை தொழிலாளர் முறை எந்தத் தொழிலில் இருந்தாலும் அதனை அடையாளம் கண்டு தக்க நடவடிக்கை எடுக்க முழு முயற்சி செய்வேன் என்றும், எந்த தொழிற்சாலைகளிலும், தொழிலாளர்களுக்கு முன்பணம் கொடுத்து பணி அமர்த்தப்படுவதை தவிர்க்க வலியுறுத்துவேன் என்றும், கொத்தடிமை தொழிலாளர்களை மீட்டு அவர்களின் முழுமையான மறுவாழ்வுக்காக பணியாற்றுவேன் என்றும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வகை செய்துள்ள அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் உரித்தாகுவதற்க்கு கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தை சீரிய முறையில் செயல்பட உறுதுணையாக இருந்து கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயல்படுவேன் என்று உளமாற உறுதியளிக்கிறேன் என்று அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்

  • h vinoth will have high chances to direct rajinikanth movie விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?