ரஜினியின் புதிய படம் – சூப்பர் அப்டேட் வெளியிட்ட சன் பிக்சர்ஸ்..!

Author: Rajesh
10 February 2022, 6:14 pm

நடிகர் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அண்ணாத்த’ படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் ரஜினி, அடுத்து ஒரு வெற்றிப்படத்தை கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார்.

ரஜினியின் அடுத்தப் படத்தை யார் இயக்கப்போகிறார்கள் என்பதுதான் அவரது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. இந்த நிலையில், ரஜினியின் 169 வது படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். 

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தற்போது, விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கி வருகிறார். நெல்சன் திலீப்குமார் சொல்லிய கதை ரஜினிக்கு பிடித்துவிட்டதையடுத்து இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது சன்பிக்சர்ஸ். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.   

  • samantha explains about crying in stage நான் அழவில்லை, தப்பா புரிஞ்சிக்காதீங்க- தனது உடல்நிலையை குறித்து பகீர் கிளப்பிய சமந்தா!