சொன்னதை செய்யாத திமுக அரசு: அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் எஸ்.பி.வேலுமணி பிரச்சாரம்..!!

Author: Rajesh
11 February 2022, 11:54 am

கோவை: கோவையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

நடைபெற உள்ள தமிழக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கோவை மாநகராட்சி கவுண்டம்பாளையம், துடியலூர் பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட கூடிய வேட்பாளர்கள் (1-பத்மாவதி, 2-கே.மணி, 3- காயத்ரி, 12-விக்னேஷ், 14-சங்கீதா பிரகாஷ், 15- வனிதாமணி, 13- ரம்யா, 16- ரேவதி, 17-அம்பிகா, 33-ராஜேந்திரன், 34-மாரிமுத்து, 35- பாலசுந்தரம்) ஆகியோரை ஆதரித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின் போது பேசிய அவர், “அதிமுக ஆட்சியில் கண்ணம்பாளையம் துடியலூர் பகுதியில் மேம்பால திட்டம், குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். மேலும் தற்பொழுது திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.

திமுக வாக்குறுதிகளில் எதுவும் நிறைவேற்றவில்லை. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை நம்பி தற்போது 8 மாணவ மாணவிகள் உயிரிழந்ததுள்ளனர். பொங்கல் பரிசு தொகுப்பில் அதிமுக ஆட்சியில் 2000 ரூபாய் தரப்பட்டது திமுக ஆட்சியில் 100 ரூபாய் கூட தரவில்லை. காவல்துறையினர் திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.

தற்பொழுது சட்டமன்ற தேர்தல் வந்தால் திமுக தோல்வி அடைந்து அதிமுக வெற்றி அடையும் வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கட்சி வேட்பாளர்களுக்கு இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யவேண்டும்.” என்றார். இந்த பிரச்சாரத்தில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார் உட்பட பல்வேறு அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!