அது ஒரு தனி பீலிங்ஸ்..! இரண்டு பேரிடம் இருந்து வர வேண்டும்..! ராஷ்மிகா ஓப்பன் டாக்..!

Author: Rajesh
17 February 2022, 6:10 pm

நடிகை ராஷ்மிகா நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் புகழ் பெற்ற படம் தான் புஷ்பா. அந்;த படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார். தொடர்ந்து பல ராஷ்மிகா கைவசம் இரண்டு ஹிந்தி படங்கள் வைத்து இருக்கிறார். சித்தார்த் மல்ஹோத்ரா உடன் மிஷன் மஜ்னு, அமிதாப் உடன் குட்பை உள்ளிட்ட ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை ராஷ்மிகா தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாக தெலுங்கு சினிமாவில் பரபரப்பு கிசுகிசுக்கபட்டு வருகிறது. ஆனால் அதனை இருவரும் மறுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், ராஷ்மிகh தனக்கு எப்படிப்பட்ட ஒருவருடன் திருமணம் நடக்க வேண்டும் என ஒரு பேட்டியில் தெரிவித்து உள்ளார். காதல் என்றால் ஒருவருக்கொருவர் மரியாதை, நேரம், மற்றும் பாதுகாப்பாக உணர வேண்டும். காதல் என்றால் என்ன என சொல்ல முடியாது, அது ஒரு தனி பீலிங்ஸ் சம்பந்தப்பட்டது. அது இரண்டு பேரிடம் இருந்தும் வர வேண்டும், ஒருவரிடம் மட்டும் அல்ல’ என தெரிவித்தார்.

மேலும், கல்யாணம் செய்து கொள்வது பற்றி, நான் எதுவும் நினைக்கவில்லை, தற்போது அதை பற்றி யோசிக்கும் அளவுக்கு எனக்கு வயதாகவில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.

  • anandraj shared his feelings about deleted his scenes in bigil movieஇது கூட பண்ணலைன்னா நீங்க இயக்குனரா?- அட்லீயை கண்டபடி கேட்ட ஆனந்த்ராஜ்!