உத்தரபிரதேசத்தில் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம் : வரிசையில் நின்று வாக்களிக்க ஆர்வம் காட்டிய மக்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 February 2022, 8:34 am

உத்தரபிரதேச மாநிலத்தில் 3 ஆம் கட்டமாக 59 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில் முதற்கட்டமாக 58 தொகுதிகளுக்கும் 2 வது கட்டமாக 55 தொகுதிகளுக்கும் ஏற்கனவே வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 3 ஆம் கட்டமாக 16 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.இதற்காக,25,741 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி,3 ஆம் கட்ட தேர்தலில் 627 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில்,2.15 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இதற்கிடையில்,3 ஆம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 245 வேட்பாளர்களுக்கு ரூ.1 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. கோடீஸ்வரர்கள் பட்டியலில் அதிடபட்சமாக சமாஜ்வாதி சார்பில் 52,பாஜக சார்பில் 48 பெரும் இடம் பெற்றுள்ளனர்.மேலும்,பகுஜன் சமாஜ் சார்பில் 46 பேரும்,காங்கிரஸ் சார்பில் 29 பேரும்,ஆம் ஆத்மி சார்பில் 18 பேரும் இடம் பெற்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து,பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கான ஒரே கட்ட வாக்குப்பதிவு இன்ற காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

  • surya vijay sethupathi movie phoenix twitter review படத்தை பார்த்தா கொமட்டிக்கிட்டு வருது? பீனிக்ஸ் படத்தை கண்டபடி கிழிக்கும் ரசிகர்கள்!