கர்நாடகாவில் பஜ்ரங்தள் நிர்வாகி படுகொலையால் நீடிக்கும் பதற்றம்: வாகனங்களுக்கு தீ வைப்பு..பேருந்துகள் மீது தாக்குதல்…!!

Author: Rajesh
21 February 2022, 4:07 pm

பெங்களூரு: பஜ்ரங்தள் பிரமுகர் கொலை தொடர்பாக ஏற்பட்ட கலவரத்தில் மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைப்பு, கடைகள், பஸ்- கார்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

கர்நாடக மாநிலம் சிவமொக்கா நகரை சேர்ந்தவர் ஹர்ஷா. 24 வயதான பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த இவரை நேற்று இரவு சிலர் பயங்கர ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்தனர். இச்சம்பவம் சிவமொக்கா நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பதட்டத்தை தணிக்க சிவமொக்கா நகரில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இன்று காலை கொலையான ஹர்ஷாவின் உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதில் இந்து அமைப்பை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

அப்போது, இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் சி.வி. நகர் பகுதியில் ஊர்வலம் சென்று கொண்டிருந்த போது, திடீரென கடைகள், பேருந்து, கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால், சிவமொக்கா நகரில் மேலும், பதட்டம் அதிகரித்தது. பதட்டத்தை தனிக்க நகரம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும், சீகேஹட்டி பகுதியில் பல வாகனங்கள் தீ வைத்த எரிக்கப்பட்டன. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஹர்ஷாவை கொலை செய்தவர்களில் 2 பேரை சிவமொக்காவிலும், மங்களூரில் ஒருவரையும், பெங்களூருவில் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • sai abhyankkar introducing in malayalam cinema through balti movie Welcome to Malayalam Cinema; சாய் அப்யங்கரை வாழ்த்தி வரவேற்ற லாலேட்டன்! தரமான சம்பவம்?