அரசு பேருந்தில் நடத்துனரிடம் பிக்பாக்கெட் அடித்த ஆசாமி…! பயணிகளிடம் சோதனையிட்டதால் பரபரப்பு…!!

Author: kavin kumar
27 February 2022, 9:32 pm

திருப்பூர் : திருப்பூரில் அரசு பேருந்தில் நடத்துனரின் மணிபர்ஸை மர்மநபர் திருடியதையடுத்து பேருந்தில் இருந்த பயணிகளிடம் சோதனையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நம்பியூருக்கு அரசு டவுன் பேருந்து ஒன்று புறப்பட்டது. 80 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பேருந்தானது புஷ்பா சந்திப்பை கடந்தபோது நடத்துனரான ரங்கசாமி தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த மணிபர்ஸ் திடீரென காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் பேருந்து ஓட்டுனரிடம் தகவலை கூறி பேருந்தானது சாலையோரம் நிறுத்தப்பட்டு, பேருந்திலிருந்த பெரும்பாலான வடமாநில இளைஞர்களிடம் நடத்துடனர் மற்றும் ஓட்டுனர் மணிபர்ஸ் குறித்து சோதனை நடத்தினர்.

அதே போல் சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் உதவியுடன் வடமாநில இளைஞர்களிடம் இருந்த பைகளில் சோதனை மேற்கொண்டும் கடைசிவரை மணிபர்ஸ் கிடைக்காததால், நடத்துனர் ரங்கசாமியோ பயணிகளிடம் பர்ஸில் அடையாள அட்டை, நடத்துனர் உரிமம் அட்டை, ஏ.டி.எம்.கார்டுகள் மற்றும் ரூ.300 பணம் இருக்கிறது பணத்தை எடுத்துவிட்டு மணிபர்ஸை பேருந்தில் போட்டுவிடுங்கள் என கூறிவிட்டு மீண்டும் பேருந்தில் பயணிகள் ஏற்றப்பட்டு, அரசு பேருந்து கிளம்பி சென்றது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  • producer asked 40 lakhs to prajin for shooting 40 லட்சம் கொடுத்தால் தான் ஷூட்டிங்?- கறார் காட்டிய வடிவேலு பட தயாரிப்பாளர்! அடக்கொடுமையே…