முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு அடாவடி.. இனி தமிழக அரசின் நிலைப்பாடு இதுதான் : அமைச்சர் துரைமுருகன் அதிரடி!!

Author: Udayachandran RadhaKrishnan
4 March 2022, 7:26 pm

வேலூர் : முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசுடன் பேச்சுவார்த்தை என்பதே கிடையாது அது தமிழக அரசின் முழு உரிமை நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார்.

வேலூர்மாவட்டம்,வேலூர் மாநகராட்சியின் மேயராக சுஜாதாவும் துணை மேயராக சுனில் குமாரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு இருவரையும் வாழ்த்தி பேசினார்.

அப்போது திமுக சார்பில் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் கட்சி பாகுபாடின்றி நீங்கள் பணியாற்ற வேண்டும் மக்களின் அடிப்படை வசதிகளான சாலையை மேம்படுத்த வேண்டும் கட்சிக்கு அவப்பெயரில்லாமல் செயல்பட வேண்டும் என்று பேசினார்.

பின்னர் அமைச்சர் துரை முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், நகர்புற உள்ளாட்சி மறைமுக தேர்தல் ஓரளவு சுமுகமாக முடிந்தது பெரும்பான்மையான இடங்களில் திமுக வென்றுள்ளது. சில இடங்களில் அங்கொன்றும் இங்கொன்றும் போட்டிகள் இருந்தது பத்திரிகையாளர்களுக்கு அதுமட்டும் பெரிதாக தெரிகிறது.

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க தமிழக அரசின் குழு ஒன்று டெல்லி சென்றுள்ளது. மத்திய அரசு தமிழக குழுவுக்கு அனுமதியளித்தால் தமிழக மாணவர்களை வேறு நாடுகள் மூலம் மீட்க நடவடிக்கை எடுப்போம் இல்லையென்றால் டெல்லியில் இருந்து தமிழக மாணவர்களை அழைத்து வருவோம்.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு அடாவடி செய்கிறது. கேரள அரசிடம் பேச்சுவார்த்தை என்பதற்கே இடமில்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு உதவும் என்று நம்புகிறோம் என்று கூறினார். பேட்டியின் போது நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார்,கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்

  • coolie movie aamir khan role update announced சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தை உடைத்த கூலி படக்குழு? ஆமிர்கான் ரோல் குறித்த வேற லெவல் அப்டேட்!