AK 62 Update: அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது..!

Author: Rajesh
18 March 2022, 7:53 pm

தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே வைத்திருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தினை போனி கபூர் தயாரித்திருந்தார், எச் வினோத் இந்த படத்தினை இயக்கியிருந்தார்.

இதனை தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகும் யுமு 61 படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில், தற்போது அஜித் நடிக்கும் 62ஆவது படத்தின் அறிவிப்பு குறித்தும் வெளியாகியுள்ளது.

லைகா நிறுவனம் அஜித்துடன் முதல் முறையாக இணையவுள்ள இந்த படத்தினை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

AK 62 என தற்காலிகமாக இந்த படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு 2022-ல் தொடங்கி , படம் 2023 பாதியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • the reason behind rj balaji changed his name as rjb அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?