‘என் நண்பனை போல யாரும் இல்ல பூமியில’…நட்புக்கு இலக்கணமான ஆர்யா, அர்ச்சனா: இணையத்தை நெகிழ வைக்கும் வீடியோ!!

Author: Rajesh
8 April 2022, 9:26 pm

கேரளா: இருகால்களும் இல்லாத தனது நண்பனை பெண் தோழிகள் இருவரும் வகுப்பறைக்கு தூக்கி செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி காண்போரை நெகிழ்ச்சி அடைய வைக்கிறது.

வாழ்வில் நாம் தேர்ந்தெடுக்கும் நண்பர்கள் சிலர் தமது குடும்பத்தினரை போன்று எந்நிலையிலும் நம்முடன் துணை நிற்பர். நம் வாழ்க்கைக்கு மதிப்பு சேர்க்கும் சரியான நண்பர்களுடன் இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை கல்லூரி மாணவர் ஒருவரின் வீடியோ நிரூபித்துள்ளது.

கேரளாவை சேர்ந்த கல்லூரி மாணவர் அலிஃப் முகமது. ‘தேவைக்கு இருப்பவனே உற்ற நண்பன்’ என்ற பழமொழிக்கு மிகச்சிறந்த உதாரணமாக இருக்கின்றனர் அலிஃப்ன் நண்பர்கள். இதில், மிகச்சிறந்த விஷயம் என்னவென்றால் நட்புக்குள் ஆண் பெண் பேதமில்லை என்பதை விளக்கி இவருக்கு உறுதுணையாக இருப்பவர்கள் இருவரும் பெண் தோழிகள் என்பதுதான்.

https://twitter.com/i/status/1512232309583663104

பிறக்கும் போது கால்கள் இன்றி பிறந்த அலிஃப்பிற்கு கல்லூரிக்கு செல்வது அவ்வளவு சவாலாக இல்லை.
கொல்லம் மாவட்டம் சாஸ்தம்கோட்டாவில் உள்ள டிபி கல்லூரியில் பிகாம் படிக்கும் இவர், வகுப்புகளுக்குச் செல்வதில் எந்தச் சவாலையும் சந்திக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் அவரது தோழிகள் தான்.

தினமும் அலிஃப்பை இவர்கள் வகுப்பறைக்கு தூக்கி செல்கின்றனர். தற்போது, தோழிகள் இருவரும், அலிஃபுக்கு உதவி செய்யும் வீடியோ “கால்கள் இல்லாமல் பிறந்தாலும், அலிஃப் முகமதுவின் நண்பர்கள் கல்லூரியில் படிக்கும் அவரது ஊனத்தை அவர் வழியில் அனுமதிக்க மாட்டார்கள்” என்ற தலைப்புடன் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் அலிஃபை தோழிகளான அர்ச்சனா மற்றும் ஆர்யா இருவரும் தூக்கி செல்கின்றனர். இந்த வீடியோ கல்லூரியில் நடைபெற்ற விழாவின் போது எடுக்கப்பட்டுள்ளது. அந்த விழாவில் புகைப்பட கலைஞராக சென்ற ஜெகத் துளசிதரன், இந்த தருணத்தை பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது.

  • thug life audio launch date postponed because of war தக் லைஃப்-ஆ முக்கியம்?- ஆபரேஷன் சிந்தூரால் அதிரடி நடவடிக்கை எடுத்த கமல்! ஆஹா…