ஜம்மு-காஷ்மீரில் தொடரும் துப்பாக்கி சண்டை…என்கவுன்ட்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: நீடிக்கும் பதற்றம்..!!

Author: Rajesh
10 April 2022, 2:13 pm

ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டான்.

Image

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று காலை தொடங்கிய துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஸ்ரீநகரில் நடைபெற்று வரும் என்கவுன்டரில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டான்.

மேலும் ஒருவன் சிக்கியுள்ளதாக காஷ்மீர் போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து காஷ்மீர் போலீஸ் தரப்பில் டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது, ஸ்ரீநகர் என்கவுன்டரில், சமீபத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளில் ஒருவன் கொல்லப்பட்டான்.மேலும் ஒருவன் சிக்கியுள்ளான். என்கவுண்டர் நடந்து வருகிறது; போலீஸ் ஐ.ஜி, காஷ்மீர்

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!