ஒண்ணா…ரெண்டா…200 போலி சான்றிதழ்கள்…தமிழக அரசு நிறுவனங்களில் வட மாநிலத்தவர்கள் ஆதிக்கம்: அப்போ தமிழர்களுக்கு இடமில்லையா?…அதிர்ச்சியில் மக்கள்..!!

Author: Rajesh
13 April 2022, 5:27 pm
Quick Share

தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்களில்சேர வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 200க்கும் அதிகமானோர் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் கொடுத்துள்ளது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பிற மாநிலத்தவர்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் படித்து பட்டம் பெற்ற இளைஞர்கள் மாநிலத்தில் இயங்கி வரும் மத்திய அரசு நிறுவனங்கள், ரெயில்வே மற்றும் என்.எல்.சி. போன்ற நிறுவனங்களில் பணியில் சேர முடியவில்லை என நீண்ட காலமாக கூறப்பட்டு வருகிறது.

போலி சான்றிதழ் கொடுத்து மத்திய அரசு வேலைகளில் சேர்ந்த வட மாநிலத்தவர்கள்..  வெளியான பகீர் தகவல்...!

இதுதவிர தமிழ் நாட்டில் இயங்கி வரும் மத்திய அரசு நிறுவனங்களும் பிற மாநிலத்தவருக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இதுபற்றிய விசாரணைகளில் டெல்லி, உத்திர பிரதேசம், ராஜஸ்தான், அறியானா போன்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் அதிகளவில் இடம்பிடித்து உள்ளனர். பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் வேலையில் சேர்வதற்காக மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

fake mark sheet: நான் தமிழ்நாட்டுல தான் சார் படிச்சேன்.. போலி சான்றிதழ்  கொடுத்து அரசு வேலை வாங்கிய வட இந்தியர்கள்! - more than 200 north indians  have got government jobs ...

தற்போது தமிழத மத்திய அரசு நிறுவனங்களில் 20-க்கும் அதிகமான வடமாநிலத்தவர்கள் போலி ஆவணங்கள் மூலம் பணியில் சேர்ந்து இருப்பது தெரியவந்துள்ளது. தமிழக தேர்வுத்துறை வழங்கியது போன்றே காட்சியளிக்கும் போலி ஆவணம் கொடுத்து வடமாநிலத்தவர்கள் மத்திய அரசு பணிகளின் பல்வேறு துறைகளில் பணியில் சேர்ந்துள்ளனர்.

இதே போன்று மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் சுமார் 200க்கும் அதிகமானோர் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்து உள்ளனர். அஞ்சல் துறை, மத்திய ரிசர்வ் காவல் படை, இந்தியன் ஆயில் போன்ற நிறுவனங்களில் இவ்வாறு நடைபெற்று இருக்கிறது. யு.பி.எஸ்.சி. மேற்கொண்ட சான்றிதழ் சரிபார்ப்பு நடவடிக்கையில் போலி சான்றிதழ்கள் கண்டறியப்பட்டு இருப்பதாக அரசு தேர்வுகள் துறை உறுதி செய்து இருக்கிறது.

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே இடமில்லையா? அதிகரிக்கும்

போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்தவர்கள் மீது போலீசில் புகார் அளிக்க அரசின் தேர்வுகள் துறை அஞ்சல் துறைக்கு பரிந்துரை செய்து இருக்கிறது. இது மட்டும் இன்றி போலி சான்றிதழ் கொடுத்த நபர்களின் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும், அரசின் தேர்வுகள் துறை மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களுக்கு பரிந்துரை செய்து இருக்கிறது.

தமிழகத்தில் இயங்கி வரும் மத்திய அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கு பணி வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், பிற மாநிலத்தவர்கள் தமிழ மத்திய அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்து இருக்கும் சம்பவம் அம்பலமாகி இருப்பதை அடுத்து அரசு வேலையில் சேர முயற்சி செய்வோர் மற்றும் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Views: - 828

0

0