ராஜா ராணி-2 சீரியல் நடிகை சந்தியாவா இது.? வீடியோவா பாத்தா அப்படி தெரியலயே..!

Author: Rajesh
27 April 2022, 11:21 am

விஜய் தொலைக்காட்சியில் முன்னணி சீரியல்களில் ஒன்று தான் ராஜா ராணி 2 தொடர். இதில் சரவணன் கதாபத்திரத்தில் சித்து நடித்து வருக்கிறார். மறுபுறம் சந்தியாவாக ரியா என்பவர் நடித்து வருகிறார். இதற்கு முன்னர் விஜய் டிவி பிரபலம் ஆல்யா மானசா தான் இந்த பாத்திரத்தில் நடித்து வந்தார். அவருக்கு தற்போது இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதால் விடுப்பில் உள்ளார். இந்நிலையில் ஆல்யா மானசாவிற்கு பதிலாக நடிகை ரியா நடித்து வருகிறார். நடிகை ரியாவிற்கு இது தான் முதல் சீரியல்.

ராஜா ராணி தொடர் மூலம் தான் ஆல்யா மானசாவிற்கு அதிக ரசிகர்கள் உருவானார்கள். அதே போன்று ரியா இந்த சீரியலில் நடிக்க தொடங்கிய முதல் நாளில் இருந்தே, இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உருவாக தொடங்கிவிட்டது. இவரின் தனித்துவமான மற்றும் அழகிய நடிப்பு பலருக்கும் பிடித்துள்ளது.

இவருக்கு சீரியலில் உள்ள ரசிகர்களை போலவே இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களிலும் பல ஃபாலோவர்ஸ் உள்ளனர். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்க கூடிய நடிகை ஆவார். அவ்வப்போது தனது மாடலிங் புகைப்படங்கள் மற்றும் ராஜா ராணி வீடியோக்களை பதிவிட்டு வருவார்.

அந்த வகையில் தற்போது இவர் தனது உடலை எப்படி கட்டுக்கோப்பாக வைத்து கொள்கிறார் என்பதற்கான ஒரு ஜிம் ஒர்க் அவுட் வீடியோவை பதிவிட்டு உள்ளார்.
இந்த வீடியோவில் இவர் ஜிம்மில் தீவீரமாக ஒர்க் அவுட் செய்ய கூடிய பயிற்சிகளை காட்டி உள்ளார். இது பார்ப்பதற்ககு வெறித்தனமான ஒர்க் அவுட் வீடியோவாக உள்ளது. ரியாவின் ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!