மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் உணவக உரிமையாளர்: அறுசுவை உணவு வழங்கி இஃப்தார் நோன்பு திறப்பு..!!

Author: Rajesh
27 April 2022, 10:32 pm

கோவை: மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக கோவையை சேர்ந்த உணவக உரிமையாளர் அறுசுவை உணவு வழங்கி இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அசத்தி வருகிறார்.

மதநல்லிணக்கத்தை கடைபிடிக்கும் வண்ணம் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியை பல்வேறு அமைப்பினர் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவையை சேர்ந்த மொஹப்பத் ரெஸ்ட்ராண்ட் எனும் உணவகத்தை நடத்தி வரும் நிஜாப் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

அனைத்து மதத்தினரையும் இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கு பெறச்செய்யும் இவர்,பேரீச்சம்பழம்,பிரியாணி மற்றும் பல்வேறு வகை உணவுகளுடன் மத நல்லிணக்க இஃப்தார் விருந்தை அனைவருக்கும் வழங்கி வருகிறார்.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி மத நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் வகையில் கோவை சரவணம்பட்டி பகுதியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கோவையை சேர்ந்த பிரபல மேஜிக் நிபுணர் டிஜோ வர்கீஸ் கலந்து கொண்டு நோன்பு நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர்க்கு நோன்பு திறக்க அறுசுவை உணவு வழங்கப்பட்டது. அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்ட இதில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் மூன்று மத கொடிகளை ஒன்றிணைத்து மேஜிக் நிபுணர் டிஜோ வர்கீஸ் சாதனையை நிகழ்த்தினார்.

  • h vinoth will have high chances to direct rajinikanth movie விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?