மீண்டும் சென்னையின் கேப்டன் ஆனார் தோனி… ஒப்புக்கொண்ட ஜடேஜா… இனி CSK ரசிகர்களுக்கு உற்சாகம்தான்…!!

Author: Babu Lakshmanan
30 April 2022, 7:51 pm

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை மீண்டும் தோனியிடமே ஜடேஜா ஒப்படைத்து விட்ட செய்தி அந்த அணியின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 26ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. புதிய வீரர்கள், புதிய அணிகள் என புதிய மாற்றங்களுடன் இந்தத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக தோனி அறிவித்தது சிஎஸ்கே ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், ஜடேஜா சென்னை அணியை வழிநடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டது. ஓய்வுக்கு முன்னதாக, சென்னை அணிக்கு சிறந்த தலைமையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் தோனி இந்த செயலை செய்ததாகக் கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இந்தத் தொடரில் புதிய வீரர்கள் கொண்ட படையுடன் களமிறங்கிய சென்னை அணி, வழக்கத்திற்கு மாறான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி, 2 வெற்றி, 6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தை பிடித்துள்ளது. இது சென்னை ரசிகர்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

சென்னை அணி தோல்வியில் இருந்து மீண்டு வராத என்று ஏக்கத்துடன் காத்திருந்த சென்னை ரசிகர்களுக்கு தற்போது நல்ல செய்தி கிடைத்துள்ளது. அதாவது, ஜடேஜா தனது கேப்டன் பொறுப்பை மீண்டும் தோனியிடம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

jadeja - updatenews360

இதைத் தொடர்ந்து, இனி வரும் போட்டிகளில் தோனி மீண்டும் கேப்டனாக செயல்பட உள்ளார். இதனால், எஞ்சிய போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

  • devi sri prasad complains that turkish singer copied his pushpa movie song என்னோட பாடலை ஹாலிவுட்டில் காப்பியடிச்சிட்டாங்க- கடுப்பில் தேவி ஸ்ரீ பிரசாத்!