திருச்சி-சென்னை ‘பை-பாஸ்’ சாலையில் மீண்டும் ஆட்டோ ரேஸ்: அச்சத்தில் பொதுமக்கள்…காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!!

Author: Rajesh
12 May 2022, 6:04 pm

சென்னை: திருச்சி-சென்னை பைபாஸ் தேசிய நெடுஞ்சாலையில் அனுமதியின்றி ஆட்டோ ரேஸ் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மக்களின் உயிருடன் விளையாடும் சட்டவிரோத பைக் ரேஸ், ஆட்டோ ரேஸ் நடத்தும் கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி கடும் நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.

சென்னை – திருச்சி இடையிலான சென்னை பை – பாஸ் சாலை, போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. இச்சாலையில், கனரக, சரக்கு வாகனங்கள் மட்டுமின்றி, அரசு மற்றும் ஆம்னி பஸ்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அதிகளவில் பயணித்து வருகின்றன. இதற்கு இணையாக, ‘டூ விலர்’களும் இச்சாலையில் அதிகளவில் பயணிப்பதால், விபத்து மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், இன்று காவல் அனுமதியின்றி நடைபெற்ற ஆட்டோ ரேஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. 3க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில சுமார் 10 க்கும் மேற்பட்டோர் சட்டவிரோத ஆட்டோ ரேசில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • h vinoth will have high chances to direct rajinikanth movie விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?