உயிரினும் மேலான தமிழை முழுமையாக பயிலனும்.. பிற மொழிகளை விமர்சிக்கக் கூடாது.. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்..!!

Author: Babu Lakshmanan
13 May 2022, 5:58 pm

தமிழுக்கு தலைகுனிவு என்றால் புதுச்சேரி அரசு ஏற்று கொள்ளாது என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி கம்பன் கழகம் சார்பில் 55 ஆம் ஆண்டு கம்பன் விழா இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. கம்பன் கலையரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொண்டு விழாவை தொடங்கி வைத்தார்.

விழாவில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக விழாவில் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், கம்பன் வட மொழியையும் படித்து கம்ப ராமாயணத்தை எழுதியுள்ளார் என்றும், தாய்மொழி தான் உயிர், அதை முழுமையாக படிக்காமல் பிற மொழியை திட்டுவது தவறு என்றும் கூறினார்.

மேலும், பிற மொழி கற்பது தவறு இல்லை என்றும் தெரிவித்த அவர், தமிழ் விளையாடும் மாநிலமாக புதுச்சேரி விளங்குவதாகவும், ஜிப்மரில் தமிழ் இல்லை என கூறி அரசியலாக்கி சிலர் தினமும் போராட்டம் நடத்தி நோயாளிகளுக்கு தொந்தரவு தருகிறார்கள் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழுக்கு தலைகுனிவு என்றால் புதுச்சேரி அரசு ஏற்று கொள்ளாது என்றும், தமிழை உயிராய் ஏற்கும் நாம் பிற மொழியை நிந்திக்க கூடாது, என்றார்.

  • h vinoth will have high chances to direct rajinikanth movie விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?