ஓடிடியில் “டான்” படம் வெளியாகிறது.? அதுக்குள்ள ஏன் என புலம்பும் ரசிகர்கள்.!

Author: Rajesh
16 May 2022, 4:55 pm

அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்து கடந்த 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியானப் படம் ‘டான்’. இந்தப் படத்தில், பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி, சூரி, பாலசரவணன், முனீஸ்காந்த் ஆகியோர் நடித்திருந்தனர்.

பள்ளி, கல்லூரி கதைக்களத்தில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சனரீதியாக வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் வெளியாகி 4 வாரங்களுக்குப் பிறகு, ஓடிடி பிளாட்பார்மில் வெளியிடும் வகையில், ‘டான்’ திரைப்படம் வருகிற ஜுன் 10-ம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், ஏன் அதற்குள்ள ஓடிடியில் வெளியிட வேண்டும் என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

  • Sundari Serial Actress Gabriella Sellus Blessed with Baby ஜூனியர் சுந்தரி வந்தாச்சு… சீரியல் நடிகை கேப்ரில்லா போட்ட பதிவு!