கல்லூரி மாணவர்கள் இடையே அதிகரிக்கும் ரவுடிசம்.. புதுக்கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
17 May 2022, 6:29 pm

சென்னை : சென்னை புதுக்கல்லூரி அருகே மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராயப்பேட்டையில் அமைந்துள்ள புதுக்கல்லூரியில் பயிலும் மாணவர் ஒருவர், தேர்வு எழுதி விட்டு பேருந்து நிலையம் வந்தார். அப்போது, வி.எம் தெருவில் வைத்து அந்த மாணவனை அடையாளம் தெரியாத ஐந்து பேர் கொண்ட கும்பல், சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளது.

இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், படுகாயமடைந்த மாணவனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவனையில் சேர்த்தனர். இதுகுறித்து ஐஸ் ஹவுஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • sara arjun as heroine 40 வயது ஹீரோவுக்கு ஜோடியான “தெய்வத்திருமகள்” நிலா? அதிர்ச்சியில் நெட்டிசன்கள்!