உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ படம் ரிலீஸ்: தியேட்டர்கள் முன்பு பட்டாசு வெடித்து அதகளப்படுத்திய ரசிகர்கள்..!!

Author: Rajesh
20 May 2022, 12:21 pm

கோவை: உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியானதை கொண்டாடும் விதமாக கோவையில் அவரது ரசிகர் ,ரசிகைகள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கி திரையரங்கம் முன்பாக நடனம் ஆடினர்.

பிரபல நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடித்து, அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள படம் நெஞ்சுக்கு நீதி. ரெட் ஜெயண்ட் மற்றும் ஜீ ஸ்டுடியோ தயாரிப்பில், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே திரையரங்குகளில் நெஞ்சுக்கு நீதி இன்று வெளியானது.

கோவை ரயில் நிலையம் சாந்தி திரையரங்கில் படம் வெளியானதை தொடர்ந்து கோவை மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் ரசிகர்கள் கொண்டாடினர். முன்னதாக கோவை வ.ஊ.சி.மைதான வளாகத்தில் மேள தாளங்களுடன் இரு சக்கர வாகனத்தில் ரசிகர்கள் ஊர்வலமாக படம் வெளியாகிய சாந்தி திரையரங்கற்கு வந்தனர்.

தொடர்ந்து ரசிகைகள் தங்களது அபிமான நடிகர் நடித்து படம் வெளியானதை கொண்டாடும் விதமாக நடனம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

  • h vinoth will have high chances to direct rajinikanth movie விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?