நல்ல காலம் பொறக்குது… பெண்ணிடம் தோஷம் கழிப்பதாக கூறி குடுகுடுப்பைக்காரர் செய்த வேலை : போலீசார் அதிரடி!!

Author: Udayachandran RadhaKrishnan
21 May 2022, 2:41 pm

திருச்சி : பெண்ணிடம் தோஷம் கழிப்பதாக கூறி நகையை அபேஸ் செய்த குடுகுடுப்பைக்காரரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம், முசிறி மேல வடுகபட்டி கிராமத்தை சேர்ந்த பெருமாள். இவரது மனைவி சாமந்தி. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வீட்டின் அருகே சென்ற குடுகுடுப்பைக்காரனிடம் ஜோசியம் கேட்டுள்ளார்.

தொடர்ந்த ஜோசியக்காரன் வீட்டிற்கு சுபிட்சம் வரவேண்டுமானால்
தோஷம் கழிக்க வேண்டும் கழுத்தில் அணிந்திருக்கும் நகையை கைட் இதர கேட்டுள்ளார். இதனை உண்மை என்று நம்பிய சாமந்தி கழுத்தில் அணிந்திருந்த முக்கால் பவுன் நகைகளை கொடுத்தார். இந்நிலையில் குடுகுடுப்பைக்காரர் அந்த பெண்ணை ஏமாற்றி நகைகளை பறித்துக்கொண்டு தப்பி சென்றார்.

இச்சம்பவம் குறித்து சாமந்தி முசிறி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்துள்ள வடக்கு அரங்கூர் முல்லை நகரை சேர்ந்த முத்தையன் (வயது 30) என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

மேலும் இதே போல் வேறு எங்கேனும் பொதுமக்களை ஏமாற்றி நகை பறிக்கச் சென்றாரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • devi sri prasad complains that turkish singer copied his pushpa movie song என்னோட பாடலை ஹாலிவுட்டில் காப்பியடிச்சிட்டாங்க- கடுப்பில் தேவி ஸ்ரீ பிரசாத்!