வசூலில் வெளுத்து வாங்கும் SK.. டான் படத்தின் வசூல் இத்தனை கோடிகளா..!

Author: Rajesh
29 May 2022, 1:14 pm

நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு என்ன வருமோ, அதற்கு எற்ற கதாபாத்திரங்களையும், கதைக்களங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் டாக்டர், இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 100 வசூலித்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்த நேற்று வெளியான டான் திரைப்படமும் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து நல்ல வெற்றியை பதிவு செய்து வருகிறது.
இப்படம் இதற்கு முன் சிவகார்த்திகேயன் பட வசூல்களை காலி செய்து வருகிறது. இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகாமாக இருந்ததால், அதிகமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டன. அதன் காரணமாக வசூலும் நல்ல விதமாக வந்து கொண்டிருக்கிறது.

இந்த படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு தான். இந்நிலையில் இப்படம் வெளிவந்து 16 நாட்கள் ஆகிய நிலையில், டான் படத்தின் தமிழக வசூல் ரூ 78 கோடியை தாண்டியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றது. இதன் மூலம் சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படமாக டான் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தனது ஒவ்வொரு படத்திலும், அடுத்ததடுத்த பாக்ஸ் ஆபீஸ் வசூலை பெற்று வரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக தரமான படக்கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தால், நிச்சயம் வரும்காலத்தில் பாக்ஸ் ஆபிஸ் டான்-ஆக சிவகார்திகேயன் உருவெடுத்து விடுவார் என கூறப்படுகிறது.

  • 5 consitions to aamir khan in the release of sitaare zameen par movie படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?