கேரளாவில் பெய்த பண மழை…. அரசு பேருந்தில் இருந்து பறந்த ரூபாய் நோட்டுகள் : அள்ளிச்சென்ற பொதுமக்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 June 2022, 10:05 pm

கேரளாவில் அதிவிரைவு அரசு பேருந்தில் இருந்து காற்றில் பறந்த பணமழை தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது.

கேரள மாநிலத்தில் வயநாடு மாவட்டத்தில் சுல்த்தான் பத்தேரி பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்பு  அதி விரைவு பேருந்து  நடத்துனரின் பையில் இருந்து  சுமார் 15,000 ரூபாய் காற்றில் பறந்து சாலையில் விழுந்துள்ளது.

இதைப் பார்த்த பொதுமக்கள் சிலர் தங்கள் வாகனங்களை நிறுத்தி பணத்தை சாலையிலிருந்து அள்ளி செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.

  • People from Tamil Nadu should not be allowed in Tirupati: Sudden demand! திருப்பதியில் தமிழக பிரதிநிதிகளுக்கு தரிசனம் வழங்கக்கூடாது : சந்தானம் படத்தால் வந்த வினை!