சிஷ்யனுக்கு பரிசளித்த குரு.. கமல்ஹாசனின் செயலால் லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி.!

Author: Rajesh
7 June 2022, 3:37 pm

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விக்ரம். பிளாக் பஸ்டர் வரவேற்பை பெற்றுள்ள விக்ரம் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டாகியுள்ளது. தமிழகத்தை தாண்டி மற்ற இடங்களிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது விக்ரம்.

இப்போதே ரூ.150 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள விக்ரம் திரைப்படம் மிக பெரிய வெற்றியடைந்த திரைப்படமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனது தீவிர ரசிகரும் விக்ரம் பட இயக்குனருமான லோகேஷ் கனகராஜ்-க்கு கமல் தற்போது விலையுர்ந்த லெக்சஸ் காரை பரிசளித்துள்ளது. அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?