மக்களின் ஒத்துழைப்போடு சட்டம் – ஒழுங்கு நிலைநாட்டப்படும் : புதிய காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் சூளுரை..!!

Author: Babu Lakshmanan
14 June 2022, 11:05 am

கோவையில் நீண்டகால அடிப்படையில் அமைதியை நிலை நாட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று புதிய காவல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவையின் புதிய காவல் ஆணையராக பாலகிருஷ்ணன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். மத்திய மண்டல ஐஜியாக இருந்த பாலகிருஷ்ணன் இன்று கோவை வந்து கோப்புகளில் கையெழுத்திட்டு பதவியேற்றார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மாநகரின் சட்டம் ஒழுங்கு முறையாக பராமரிக்கப்பட்டு, கோவை அமைதியான நகராக உள்ளது. இங்கு சட்டம் ஒழுங்கை மேலும் மேம்படுத்தவும், குற்றங்களைத் தடுக்கவும், குற்றங்கள் நடப்பதை முன்கூட்டியே தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

எங்கெல்லாம் கண்காணிப்பு காமிராக்கள் இல்லையோ அங்கெல்லாம் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும். தமிழக முதல்வர் சில பிரச்சனைகளில் முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார். அதன்படி, கஞ்சா போன்ற போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலைத் தடுத்தல், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்தல் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

கோவையில் நீண்டகால அடிப்படையில் அமைதியை நிலையை நாட்ட கம்யூனிட்டி போலீஸ் அடிப்படையில் சமுதாய நலனில் ஆர்வமுள்ள மக்கள் ஒத்துழைப்பைப் பெற்று இன்னும் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சாதி, மத, இன வகையில் கலவரத்தை ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவையில் அடிக்கடி விபத்துகள் நடக்கும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகளில் தனிக் கவனம் செலுத்தப்படும். சிக்னல்கள் வேலை செய்வது முறைப்படுத்தப்படும், என தெரிவித்துள்ளார்.

  • h vinoth will have high chances to direct rajinikanth movie விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?