வெளிநாட்டில் அஜித்தின் Bike Trip.. புகைப்படங்கள் வெளியானதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணமா.? வெளியான புதிய தகவல். !

Author: Rajesh
27 June 2022, 6:33 pm

வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். போனிகபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடிக்கிறார். மேலும் சமுத்திரகனியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது.

தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்ட அஜித் திடீரென லண்டன் சென்றார். அங்கு பைக் ரைடில் ஈடுபடுவது போன்ற புகைப்படங்கள் தொடர்ந்து வெளிவந்து வைரலானது.

இதை பார்த்த தன்னை விளம்பரபடுத்த இது போன்ற வேலைகளில் அஜித் ஈடுபடுகிறார் என்றும், இவரால் தான் அந்த படத்தின் படப்பிடிப்பு தேதி தள்ளிப்போவதாகவும், இணையத்தில் வதந்திகளை பரப்பி வந்தனர்.ஆனால் தற்போது அஜித் ஏன் அங்கு சென்றார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, 52 நாள்கள் படப்பிடிப்பில் தன்னுடயை காட்சிகளை முடித்து விட்டுதான் போயிருக்கிறாராம். மேலும் இந்த படத்தில் சில காட்சிகளுக்கு வேறொரு கெட்டப்பில் வர இருக்கிறாராம்.

அந்த கெட்டப் வெளியில் தெரியக்கூடாது என்பதற்காகவே இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டதாகவும், இருந்த கெட்டப்பிலயே பைக் ரைடை முடித்துவிட வேண்டும் என்பதற்காகவும் தான் லண்டன் சென்றாராம். மீண்டும் வந்து புதிய கெட்டப்பில் தோன்றும் அஜித்தை வெளியில் இனி ரிலீஸ் ஆகிற வரைக்கும் பார்க்க முடியாது எனவும் செய்திகள் வெளி வந்த வண்ணம் உள்ளன.

  • coolie movie aamir khan role update announced சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தை உடைத்த கூலி படக்குழு? ஆமிர்கான் ரோல் குறித்த வேற லெவல் அப்டேட்!